Wednesday, 8 July 2015

எனக்கான என்னவளுக்காக... waiting is the way

எனக்கான அவள் கூந்தலை இதுவரை என் கை விரல்கள் கோதியதில்லை
எனக்கான அவள் கண்களை இதுவரை பார்த்ததில்லை
எனக்கான அவள் உதடுகளை இதுவரை நான் முத்தமிட்டதில்லை
எனக்கான அவள் கன்னங்களை இதுவரை கிள்ளியதில்லை
எனக்கான அவள் தேகத்தை இதுவரை நான் தீண்டியதில்லை 
எனக்கான அவள் கைகளை இதுவரை என் கை கோர்த்ததில்லை
எனக்கான அவள் விரல்களை இதுவரை நான் வருடியதில்லை
எனக்கான அவள் கால்களை இதுவரை தழுவியதில்லை
எனக்கான அவளை இதுவரை முகர்ந்ததுமில்லை
எனக்கான அவளை இதுவரை கண்டதுமில்லை
எனக்கான அவளை இதுவரை யாரென்று நான் அறிந்திருக்கவுமில்லை
இருந்தும்,
எனக்கான அவளை இன்று முதல் நினைக்கிறேன்.
எனக்கான அவளை என்று நான் காண்பேன் என
என்னையே கேட்கும்  என்  மனத்திடம் என்னென்று நான்  சொல்வேன்.
இனியும் காத்திர இயலாது எனத் துடிக்கும் இதயத்துக்கும்,
இமைக்கும் கண்களுக்கும் ஒன்று சொல்லி வைத்திருக்கிறேன்-
அவளைக் காணும் நாள் மிக விரைவில்
அதுவரை அயராமல் விழித்திருப்பாயாக.

--- யாரென்று தெரியாத எனக்கான என்னவளுக்காக காத்திருப்பதிலும் தனிச்  சுகம் இருப்பதாய்  உணர்கிறேன்.



Waiting is the way - கிருஷ்ணா  அத்தான்