Sunday, 31 July 2016

எதன் மீது காதல் ?!

காதல்..!

உன் மீதா?
என் மீதா ?

இல்லை ,
நிகழ் தனை தொலைத்து,
நினைவுகள் சுமக்கும்
நம் மீதா ?
எதன் மீது காதல் ?!


காதல்,

மண்ணையும் பொன்னையும்
நிலவையும் கதிரையும்
வெயிலையும் மழையையும்
தேனையும் வண்டையும்
உயிரையும் உலகையும்
நின்னையும் என்னையும்
அனைத்தயும் ஒன்றென
உணர்ந்த பின்,

எதன் மீதும்
காதல்..!

Tum Tak :)