Friday, 2 December 2016

தேடல்

தேடல்
அதனினுஞ் சுக முன்டோ இவ்வாழ்வு தனில்.
நில்லாமல் எனையும் உனையும் மாந்தரனைவரையும்
வாழ வளர வைக்கும் ஒரே சூட்சுமம் அது.


மழையினில் நனைந்தே,
மலைகள் கடந்தேன்.
நெடு வெளிகள் நடந்தே,
உலகின் திசை எட்டுஞ் சென்றேன்.
சுற்றும் புவிதனை நானுஞ் சுற்றித் திரிந்தேன்,
தேடல் எனும் அணையாச் சுடர் தனை
நெஞ்சில் எரிய வைத்து !


என் தேடல் எதுவென்று
யாமறிந்தோம் காண்.
அதைத் தாமறிய விளையுமுன்
உம் அகத்தினைக் கேளீர்
உமது தேடல் எதுவென்று நீர் அறிந்திடவே !!

என் தேடல் நீயன்றோ ஷக்தி.

Tum Tak :)