Tuesday, 1 August 2017

என்னுடன் நீ - முதல் கனவு

முதல் முறை நீ என் கனவில் வந்தாய் !
முதல் பயணம் - முதல் ஸ்பரிசம்
முழுதும் காதல் உன் கண்களில் !

முதல் கனவு - என்னோடு சேர்ந்து
நீயும் நானும் !

கனவில் நீ வந்ததே ஓர் கவிதைபோல் ஆன பின்,
அதை நான் கவி எழுத முற்படுவதெதற்கு ?! - விட்டுவிட்டேன்.

மறுமுறை என் கனவை கவிதையாக்க வருவாயா ?
நிஜத்தில் என்னோடு நீ வரமுடியாமல் போனதனால்.

அவள் அவன்
Tum tak :)


Friday, 26 May 2017

மணப்பெண் மனதோடு..!



வண்ணக் கோர்வையென வாழ்ந்தேனடி,
இன்றுநன் மணக்கோலம் பூண்டேனடி.

வண்ண வாழ்வனைத்தும் மணவாழ்வதனிலும் தொடருமோ
இல்லறச் சுமையதனால் இருள்மேகம் கவிந்திடுமோ ?!

எவ்வாழ்வதனை இவ்வாழ்வெனக் கருளும்
எனப் பார்த்திட என்னோடு சேர்ந்து வாராயோ கண்ணம்மா ?

புதுவாழ்வதன் பக்கம் என்னதான் பூட்டி வைத்திருக்கிறதென
திறந்தெட்டிப் பார்த்திடுவோமே என் செல்லம்மா !!

மணவாழ்வு அதை எண்ணித் துணிகையில்,
"ஆர்பரிப்பும் அவஸ்தையும்" எனை ஒருசேர ஆட்கொள்ளுதடி.

எதிர்பார்புகளோ என் நெஞ்சுக்குழி யதனில்
வார்த்தையில்லா பல்வகை உணர்ச்சிகளைச் சுழற்றுகிறதடி.

ஓர்நாளில் ஓர்நொடியில் என் வாழ்வனைத்தும்
தலைகீழ் மாறிடுமென கணப்பொழுதும் எண்ணிலேனடி !

இனி, இதுவென் வாழ்வென்று உள்ளுணர்ந்த பின்
தீர்க்கமாய் உவகை பூத்தேனடி பொன்னம்மா.

என்னவர் வீட்டில் நான் புகுந்த மறுநொடி
என்னகத்தில் அவர் வீடும் குடும்பமும் நிறைந்ததடி.

என் வீடு என் சொந்தம் என நினைத்தரவணைத்தப் பொழுதே
மனத்திலொரு ஒளிச்சாளரம் திறந்ததடி  !!



Sunday, 8 January 2017

That's SHE

That's SHE !!
============

Who is She ?
She is just an addictive dope.

Who is She ?
She is just a seductive drug.

Who is She ?
She is just an exhibit.

Who is She ?
She is just a marketing tool.

Who is She ?
She is just a thing ought to be under the hands of few men (retards).

Who is She ?
She is just something to exploit.

Who is She ?
She is just a fleshy toy which few men (retards) scan and experiment.

Who is She ?
She is just a body that bleeds periodically.

Who is She ?
She is just a sex content and Taboo at times.

Who is She ?
She is just some other thing.

Who is She ?
She is just... Oh just leave "IT".

Who is She ?
She is just... I don't even know !!

Who is She ?
F**K... WHO CARES ?!

============
Our MOTHER          Our SISTER
Our NIECE                Our FRIEND
Our DAUGHTER      Our EVERYTHING

That's SHE
=============