நித்தமும் தொழுதோம்
நிதர்சனமும் கண்டோம்
கனியமுதும் படைத்தோம்
தமிழ்ச்சுவையும் சேர்த்தே !
பற்றுதனை கொண்டோம்
முற்றிலுமாய் உன் மீதே
கற்று உனை அறியவே
கடுந்தொலைவு கடந்தோம் !
கச்சிதமாய் உனைக் கண்டு
காவியம் தனை படைத்திடவே
பார் முழுதும் பறந்தோம்
பரிதவித்தே நின்றோம் !
காண்கர்கரிய சிற்பமாய்
கற்பனையிலே சிறப்பாய்
கண்மூடி உனைக் கண்டோம்
கண் திறந்தால் - வெற்றிடம் வெறும்பியதே !
முக்குலத்தோர் முதல் இக்குலத்தோர் வரை
கடுந்தவம் இருந்தும்-உனைக்
கண்டொளிக்கவும் இல்லை-தனை
விட்டொழிக்கவும் இல்லை !
இதிகாசத்திலும், கவிச்சோலைகளிலும்
பரந்தாமனாய், பார் போற்றும் வள்ளலாய்
புரட்சித்தலைவனாய் , புஜ பல பராக்கிரமனாய்த் தோன்றியவனே
உனைப் புரியாமலேயே கடந்தோம் !
எங்கெல்லாம் அதர்மம் தழைக்கின்றதோ-அங்கெல்லாம்
தனை அழிக்க தோன்றவுமில்லை , மனைக் காத்தருளவுமில்லை
பார் போற்றும் பாரதியே
நிற்பதும் , நடப்பதும் , பறப்பதும் மட்டுமே மாயையோ!
என் இன மக்கள் பிளவுண்டு வாழவும் , பிறர்தனை வதைக்கவும்
முழுமுதற் பொருளாகவும் கர்த்தாவாகவும் இருக்கும் உனை
வீணாய் தினம் தொழுகின்றனர்
நீயே கதி என்று இருகின்றனர் !
எல்லாமாய் இருப்பவனே
யாவரும் தொழுபவனே
பண்டைய போரில் , வில் அம்புகளும் வாள்களும்
உனைப் பதம் பார்க்காமல் நீ பிழைத்திருக்கலாம்
ஆனால் இக்கணமோ ,
ஐயாயிரம் கல் தொலைவில் இருந்தாலும்
துல்லியமாய் உனைத்தாக்கிடவே பார்த்திபன் பலர் இருக்கின்றனர் !
அதனாலேயோ நீ வர மறுக்கின்றாய் !
அட !
புரியாத புதிராய் இருப்பவனே
உனைப் புரிந்தே விட்டேன் நானே !
மட மாந்தர்களே !
அவன் இருக்கின்றான்
ஆனால் அவனோ இல்லை
புத்தியும் இருந்தும் புரியாமல் இருக்கின்றீரே
இத்தனைக் கற்றும் , இத்தனைப் பெற்றும்
முற்றும் உனை அறியாமல்
கல்லைக் கடவுள் என்கிறீரே !
கடவுள் என்று எவரும் இல்லை
ஆனால் அதன் தன்மை மட்டும்
தரணி எங்கும் அமுதாய் தழுவுகின்றது
அது உன்னிடமும் இருக்கின்றது
அது உன்னிடமே இருக்கின்றது
அதை அள்ளித் தெளித்தால்
"" நீயே கடவுள் ""
~shavin earthy
No comments:
Post a Comment