Wednesday, 14 August 2013

The Omnipresent


அல்லும் சிவமே  அறமும் சிவமே
புல்லும் சிவமே  புறமும் சிவமே
நெல்லும் சிவமே  நெருப்பும் சிவமே
கரமும் சிவமே  சிரமும் சிவமே
அணுவும் சிவமே  ஆதவனும் சிவமே
அகிலம் சிவமே  அனைத்தும் சிவமே
மடுவும்  சிவமே  மலையும் சிவமே
இருளும் சிவமே  ஒளியும் சிவமே
முதலும் சிவமே  முடிவும் சிவமே
பொழுதும் சிவமே  முழுதும் சிவமே
காதல் சிவமே  மோதல் சிவமே
சப்தமும் சிவமே  நிசப்தமும் சிவமே
கோபம் சிவனே  சோகம் சிவமே
மோகம் சிவமே  போகம் சிவமே 
நேசமும் சிவமே  வேசமும் சிவமே
சேவையும் சிவமே  வேசையும் சிவமே
இயற்கையும் சிவமே  செயற்கையும் சிவமே
சவமும் சிவமே  பிரசவமும் சிவமே
உடலும் சிவமே  உயிரும் சிவமே
காயும் சிவமே  கனியும் சிவமே
அண்ணலும் சிவமே  இன்னலும் சிவமே
ஆளும் சிவமே  கோளும் சிவமே
கல்லும் சிவமே  கள்ளும் சிவமே
சத்தியம் சிவமே  நித்தியம் சிவமே
அண்டம் சிவமே  பிண்டம் சிவமே
அண்டகடாகமும் சிவமே  அண்டகோசமும் சிவமே
சக்தி என்பார்  அதுவும் சிவமே
முக்தி என்பார்  அதுவும் சிவமே
சிந்தை சிவமே  விந்தை சிவமே
தந்தை சிவமே  தாயும் சிவமே 
எங்கும் சிவமே  எதிலும் சிவமே 
சர்வமும் சிவமே  சிவமும் சிவமே .

2 comments: