ஒரு மாலைப் பொழுதில்,
மதி மயங்கும் அந்தி வேளையில்,
தனிமையில் திக்கெட்டு தெரியாமல்
இரயிலுக்காக காத்திருந்தேன்.
தனிமையின் பிடியில் சிக்குண்ட எனக்கு
அலைமோதும் கூட்டத்திலும்,
நடைமேடை வெறிச்சோடியதாய் இருந்தது.
எங்கு போகிறேன் எனத் தெரியும்,
எதற்கு போகிறேன் எனவும் தெரியும்,
ஆனாலும் போக மனமில்லை,
காரணம் - அவள் என்னருகில் இல்லை.
நெடுந்தொலைவு நோக்க நானிருந்த போதும்,
கடுந்தொலைவு கடக்க நான் துணிந்த போதும்,
கைக்கோர்த்து நடக்க நீ இல்லையடி கண்ணாம்மா,
நெஞ்சை நெருட நீ அருகிலில்லை, இது நியாயமா ?!
காடு மலையெனக் காற்றாய் பறந்திட,
நாடு நகரமென நதியாய் நாம் நிறைந்திட,
மண்ணில் மழையென நித்தம் பொழிந்திட,
தரணியில் உயிரென உவமகிழ்ந்து உயிர்த்திட,
வாராய் அடி நீ சக்தி,
தாராய் எனக்கு நீ முக்தி !!
மதி மயங்கும் அந்தி வேளையில்,
தனிமையில் திக்கெட்டு தெரியாமல்
இரயிலுக்காக காத்திருந்தேன்.
தனிமையின் பிடியில் சிக்குண்ட எனக்கு
அலைமோதும் கூட்டத்திலும்,
நடைமேடை வெறிச்சோடியதாய் இருந்தது.
எங்கு போகிறேன் எனத் தெரியும்,
எதற்கு போகிறேன் எனவும் தெரியும்,
ஆனாலும் போக மனமில்லை,
காரணம் - அவள் என்னருகில் இல்லை.
நெடுந்தொலைவு நோக்க நானிருந்த போதும்,
கடுந்தொலைவு கடக்க நான் துணிந்த போதும்,
கைக்கோர்த்து நடக்க நீ இல்லையடி கண்ணாம்மா,
நெஞ்சை நெருட நீ அருகிலில்லை, இது நியாயமா ?!
காடு மலையெனக் காற்றாய் பறந்திட,
நாடு நகரமென நதியாய் நாம் நிறைந்திட,
மண்ணில் மழையென நித்தம் பொழிந்திட,
தரணியில் உயிரென உவமகிழ்ந்து உயிர்த்திட,
வாராய் அடி நீ சக்தி,
தாராய் எனக்கு நீ முக்தி !!
No comments:
Post a Comment