Thursday, 22 March 2012

"எங்கேயும் காதல் - எனக்குள்ளும் காதல் "

உலகம் உறங்கும் நேரம்
தனியே நான் இங்கிருக்கும் சோகம்
அடி பெண்ணே  உன் நிழலை எங்கே காணோம்
என் மனதில் காதலின் காயம்
அன்பே இது உன் மாயம் .


"யோசிக்கத் தேவையில்லை, உனை பற்றி எழுத - அனால்
யோசிக்கிறேன், உன்னை பற்றி எழுதவ வேண்டாமா என்று".

 கண்ணுக்குள் கண்ட உன்னை - இன்று
நிலத்திலும், நீரிலும், காற்றிலும், ஆகாயத்திலும் மட்டுமே காண முடிகிறது.
நெருப்பில் உனைக் காணமுடிவதில்லை!
அதனால் இறப்பில் நெருப்பில் போக விருப்பமில்லை எனக்கு.

"சிதறிய கண்ணடித் துண்டுகளில் தெரியும் பிம்பங்கள் போன்று
இரவில் பல நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நீ  தெரிகிறாய்".


இதுவரை நான் மட்டுமே ஒருதலையாக காதலிக்கிறேன் என நினைத்தேன்,
ஆனால் கல்லூரி கடைசி நாட்களில், பிரிவு நெருங்கையில்,
பிரிவைத் தடுக்க வழியில்லாமல், உன் இயலாமையால்,
நீ  என் மீது கோபப் படுகையிலும்,
வார்த்தைகளால் உரிமையாக சுட்ட போதிலும் தான் தெரிந்தது-நீயும்
என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என!
ஆனால் அதை உன் மனதிற்கு வெளிப்படையாக சொல்லத் துணிவில்லை.

ஒரு வருடத்திற்கு முன் நீ என் வாழ்வில் வந்திருந்தால்,
உன் வாழ்வும் என் வாழ்வும் வேறு திசையில் மாறி, ஒன்றாய்  இணைத்திருக்கும்.
ஆனால் இன்று இருவரும் வெவ்வேறு திசையில் பயணிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம்.
அட!  வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இது தானோ.

"எங்கு பிரிந்து சென்றாலும், நீயும் நானும் இப்பூஉலகில் தான்!
மறைவதும் - கலப்பதும் இவ்வுலக மண்ணில் தான்!

நீ சுவாசித்த காற்று என்றாவது ஒரு நாள்
இவ்வுலகைச் சுற்றியாவது எனை வந்து சேரும், வருடும் !

நீ கால் நனைத்த கடல் அலை என்றாவது ஒரு நாள்
என் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் என் மீது மழையாக விழவே செய்யும்".
"என்றாவது ஒரு நாள் பூமித்தாயின் மடியில் ஒன்றாக கலப்போம் ,
அது வரையில் நினைவுகளைச் சுமப்போம்!"

        
---இப்படி எல்லாம் சொல்லியே மனதைத் தேற்றிகொள்ளும் காதலர்களில் ஒருவன்
                                                                                        
                                                                                ~Shavin Earthy

5 comments:

  1. அருமை ..... அருமை ...... மிகவும் அருமை....... ஷவின் , உனக்குள்ளும் இப்படி ஒரு திறமையா ! ஒரு நிமிடம் வியந்து போனேன் நான்...... எனது இரு கரங்களின் ஓசை உனக்கு கேட்டிருக்கும்.......... வாழ்த்துக்கள் கவினனே........ எங்கேயும் காதல் எனக்குள்ளும் காதல் ..... அருமையான வரிகள்..... அனைத்தும் நெஞ்சை கில்லிஎடுத்து படைத்த முத்தான வரிகள்........... உமது கவி பணி மேலும் சிறக்க எமது மணமார்ந்த வாழ்த்துக்கள்...... உமது அடுத்த கவிதையை வாசிக்க காத்திருக்கும் எனது விழிகள் ...... அசோக்....

    ReplyDelete
    Replies
    1. இஇ இ :) வீட்டில் வெட்டியாக இருப்பதால் வந்த வரிகள்

      Delete
  2. hey dude...flowering happens..good..keep growing..

    ReplyDelete
    Replies
    1. அண்ணனின் ஆசிர்வாதங்களுடன் :)

      Delete