Wednesday, 30 May 2012

"கருவறைத் தூக்கம்"

 

 

 

 

 

 

 







"உலகின் பல இரவுகளை நான் பார்த்திராத பொழுதும்
என் பல இரவுகளை நான் கண் விழித்து பார்த்தே இருந்திருக்கிறேன் / கடந்திருக்கிறேன்.
உலகின் இரவுகளில் என் இரவும் ஒன்று தான்
- இருப்பினும்
எனது இரவுகள் எனக்கானதாக இருந்ததே இல்லை
."

சிறு வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்
  "நாம் எப்படி வளர்கிறோம்  என்று ?"
அம்மா சொன்னாள்,

இரவில் இந்திரன் வருவான்", வந்து நம் கை கால்களை இழுத்து விடுவான்" என்று.
வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான்
,
இரவில் இமை பிளந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்,
இந்திரன் வருவதை நோக்கி.
"அப்படிச் சென்றன பல இரவுகள்"
இதுவரை இந்திரன் வரவும் இல்லை,

நான் பெரிதாக ஒன்றும் வளர்ந்ததாக தெரியவுமில்லை
!

மற்றொரு சிறுவயதில்
,
அண்ணன்மார்கள் அக்காமார்கள் சொன்ன பேய்க்கதைகள்,

பகலில் திகிலையும்
, இரவில் தூக்கமின்மையும் தந்தன.
மார்கழி மாத இரவுகளில்
, நாய்கள் குளிரில் நடுங்கி ஊளை இடுகையில்,
அது பேயைப் பார்த்து ஊளையிடுவதாகச் சொல்லிப்
  பீதியை கிளப்புவான் அண்ணன்.
பயத்தில் நடுங்குவதைச் சமாளிக்க
, குளிரில் நடுங்குவதாகச் சொல்லி
போர்வைக்குள் "இறுகக் கண் மூடி
விழித்திருந்த இரவுகள்" பல.

தூக்கம் கண்ணைக் கட்டும் பொழுதும் தூங்கவிடாமல் "
"படிக்கச் சொல்லி
அப்பாவிடம் அடிவாங்கி விழித்த இரவுகள் பல
.
தூங்கிய பின்னும்
, அப்பா T.V  பார்க்கும் சத்தத்தில் விழித்து,
அப்பாவிற்கு தெரியாமல்
, போர்வையின் ஓட்டை வழியே
T.V பார்க்க விழித்த இரவுகள் பல.

பள்ளியில் சக மாணவியை திட்டிய சந்தோஷத்தில் வீடு வந்தால்
,
அவள் நான் திட்டியதால் மனம் உடைந்து
, தூக்கு மாட்டிக்கொள்வாளோ என்னும் போலி பயம்
மனதை கவ்வும்
, கலங்கடிக்கும். தூக்கத்தை -
விரட்டும்
, துரத்தும்,பிடிக்கும்,கடிக்கும்,நொடிக்கும்,விழுங்கும் !
அடுத்த நாள் அந்த மாணவி பள்ளிக்கு வந்த சந்தோஷத்தில்

அந்த இரவின் தூக்கமும் போகும்
.

பின் பருவ மாற்றத்தில்
,
தூக்கம் போக்கும் கதைகளும் காரணங்களும் மாறியதே தவிர

தூக்கமில்லா இரவுகள்,
."விடாது கருப்பு" என தொடர்ந்த
சரி தான்
, "இரவும் கருப்பு தானே "!

சிறு வயதில் பேய்களால் ஓடிப்போன தூக்கம்,

இப்பருவத்தில்
  பெண்களால் ஓடிப்போனது.
சுமாராக இருக்கும் நம்மை
(என்னை)
சூப்பர்-
ஆக இருக்கும் ஒரு பெண்
தன் கண்ணைச் சிமிட்டிப் பார்த்தாள் -
போனது அன்றைய தூக்கம்
இமைதாள் - போனது அடுத்த இரவின் தூக்கம்
சிரித்தாள் - போனது  அந்த வாரத்தின் தூக்கம்
பேசினா
ள் - போனது அந்த மாதத்தின் தூக்கம்
பழகினாள் -
போனது அந்த வருடத்தின் தூக்கம்
விலகினாள் -
போனது வாழ்க்கையின் தூக்கம்
"மனம் வலித்தது , கண்கள் விழித்தது"

பின் ஒருவாறு , காலப்போக்கில் தேறியது மனம், போனது தூக்க சுகம்.
வீட்டின் பொறுப்புகள் தோளில் விழ, மறுபடியும் போனது தூக்கம்.
வீட்டின் சுமையால், விரும்பிய வேலை செய்ய முடியாமல்,
வந்தது மன இறுக்கம்,போனது சுக தூக்கம்.

இப்பொழுது இதையெல்லாம் வெற்றியுடன் கடந்தாயிற்று.
வெற்றிக்கென்று ஒரு விலை கொடுக்க வேண்டுமல்லவா.
விலை . . . . . . . . . ஹ்ம்ம், வேறென்ன  "தூக்கம் தான்"!

இப்பொழுது எனக்கு பெண் பார்கிறார்கள்.
இப்பொழுதும் எனக்கு தூக்கமில்லை.
காரணம்  முன்னாள் காதலியை பிரிந்த சோகம்,
வரப்போகும் பெண், 
அவளை மாதிரி(அவளாகவே) இருக்க மாட்டாளா என்ற ஏக்கம்.

ஒருவழியாக கல்யாணம் முடிந்தாயிற்று  !
எல்லோர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதில்  ரொம்பவே சோர்வு !
இன்றிரவாவது தூங்க விடுவார்கள் என நினைத்தேன், அனால் அதுவும் நடக்கவில்லை.
ஆனால் கவலைப்பட வேண்டாம், நல்ல சேதி தான்.
இன்று எனக்கு முதலிரவு !
புது மனைவி, புது சொந்தங்கள் என,
என்னை விட்டு பிரிந்தன பல இரவுகள்.
மோகத்திற்கு விலையாய் கொடுத்த இரவுகள் பல
அந்த மோகம் பரிசாய் கொடுத்த குழந்தையை வளர்க்க
தியாகமாய் விட்டெறிந்தேன் பல இரவுகளின் தூக்கத்தை.

பின் குழந்தையின்..... "என் குழந்தையின்" (அதில் தான் எத்தனை பெருமை)
வளர்ப்பிலும்,படிப்பிலும் விரயம் போனது என் இரவுகள்.
பெண் குழந்தை ஆயிற்றே என்ற கவலையும்,
இரவில் அலாரம்(alarm) வைக்காமல் எழுப்பிவிட்டு
என்னை வேடிக்கை பார்க்கும்.
எப்படியோ அவளும் வளந்தாயிற்று !
அவளுக்கு சீரும் சிறப்புமாய் கல்யாணம் செய்தாயிற்று !
அதற்காக விட்டுகொடுத்த தூக்கமில்லா இரவுகளைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
கல்யாணத்திற்கு பின் மகள் பிரிந்து சென்றதால்,
தூக்கம் வரா இரவுகள் சில.
புகுந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வாள் என்ற கவலையில்
தூக்கம் போன இரவுகள் சில.

இப்பொழுது அவளுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது.
பேரன் பிறந்திருக்கிறான் ! மட்டற்ற மகிழ்ச்சி !
இன்று தூங்கலாம் என் நினைத்திருந்தேன்.
சற்று முன் தான் மகள் அழைத்தாள்
பேரனை வளர்க்க எங்கள் உதவி கேட்டு.
இரண்டு வருட உறக்கம் பேரனுக்காக விட்டெறிந்தேன் !

இப்பொழுது பேரனும் வளர்ந்து விட்டான்.
எங்கள் உதவி தேவையில்லை.
நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாயிற்று.
"இரவு மணி  7 :30 "
இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டேன்,
மொட்டை மாடியில் காலாற நடந்தேன்,
காது மடல்கள் குளிர்கிற வரையில், காற்றில் மிதந்தேன்.
சிறு வயதில்,
நான் எண்ணிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையை சரி பார்த்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
காரணம் - இன்றிரவு நான் தூங்க போகிறேன்.

கருப் பொழுதில், என் தாயின் கருவறையில்,
காற்றே இல்லாத கும்மிருட்டில், எந்தக் கவலையும் இன்றி,
சந்தோசமாக சுருண்டு படுத்திருந்த இரவுகள்,
நான் வெளிவந்த பின், எந்த  a /c காற்றும்  
எனக்கு கொடுக்க வில்லை.

இன்றிரவு நான் அப்படி ஒரு தூக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் .
ஆம்! நான் தூங்கப் போகிறேன்!!
இனி நான் விழிப்பது நாளை அல்ல.
அடுத்த ஜென்மத்தில் தான்.
அதுவரை மற்றொரு தாயின் கருவறையில்,
அடுத்த ஜென்மத்தின் அத்துனை இரவுகளின்
"நிம்மதியான தூக்கத்தையும்"
ஒரே பொழுதாக, பத்து மாத தூக்கத்தில் ஆளப்போகிறேன் !!
  

 good night ! sweet dreamz !!

                                       ~ shavin earthy

No comments:

Post a Comment