Wednesday, 30 May 2012

"கருவறைத் தூக்கம்"

 

 

 

 

 

 

 







"உலகின் பல இரவுகளை நான் பார்த்திராத பொழுதும்
என் பல இரவுகளை நான் கண் விழித்து பார்த்தே இருந்திருக்கிறேன் / கடந்திருக்கிறேன்.
உலகின் இரவுகளில் என் இரவும் ஒன்று தான்
- இருப்பினும்
எனது இரவுகள் எனக்கானதாக இருந்ததே இல்லை
."

சிறு வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்
  "நாம் எப்படி வளர்கிறோம்  என்று ?"
அம்மா சொன்னாள்,

இரவில் இந்திரன் வருவான்", வந்து நம் கை கால்களை இழுத்து விடுவான்" என்று.
வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான்
,
இரவில் இமை பிளந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்,
இந்திரன் வருவதை நோக்கி.
"அப்படிச் சென்றன பல இரவுகள்"
இதுவரை இந்திரன் வரவும் இல்லை,

நான் பெரிதாக ஒன்றும் வளர்ந்ததாக தெரியவுமில்லை
!

மற்றொரு சிறுவயதில்
,
அண்ணன்மார்கள் அக்காமார்கள் சொன்ன பேய்க்கதைகள்,

பகலில் திகிலையும்
, இரவில் தூக்கமின்மையும் தந்தன.
மார்கழி மாத இரவுகளில்
, நாய்கள் குளிரில் நடுங்கி ஊளை இடுகையில்,
அது பேயைப் பார்த்து ஊளையிடுவதாகச் சொல்லிப்
  பீதியை கிளப்புவான் அண்ணன்.
பயத்தில் நடுங்குவதைச் சமாளிக்க
, குளிரில் நடுங்குவதாகச் சொல்லி
போர்வைக்குள் "இறுகக் கண் மூடி
விழித்திருந்த இரவுகள்" பல.

தூக்கம் கண்ணைக் கட்டும் பொழுதும் தூங்கவிடாமல் "
"படிக்கச் சொல்லி
அப்பாவிடம் அடிவாங்கி விழித்த இரவுகள் பல
.
தூங்கிய பின்னும்
, அப்பா T.V  பார்க்கும் சத்தத்தில் விழித்து,
அப்பாவிற்கு தெரியாமல்
, போர்வையின் ஓட்டை வழியே
T.V பார்க்க விழித்த இரவுகள் பல.

பள்ளியில் சக மாணவியை திட்டிய சந்தோஷத்தில் வீடு வந்தால்
,
அவள் நான் திட்டியதால் மனம் உடைந்து
, தூக்கு மாட்டிக்கொள்வாளோ என்னும் போலி பயம்
மனதை கவ்வும்
, கலங்கடிக்கும். தூக்கத்தை -
விரட்டும்
, துரத்தும்,பிடிக்கும்,கடிக்கும்,நொடிக்கும்,விழுங்கும் !
அடுத்த நாள் அந்த மாணவி பள்ளிக்கு வந்த சந்தோஷத்தில்

அந்த இரவின் தூக்கமும் போகும்
.

பின் பருவ மாற்றத்தில்
,
தூக்கம் போக்கும் கதைகளும் காரணங்களும் மாறியதே தவிர

தூக்கமில்லா இரவுகள்,
."விடாது கருப்பு" என தொடர்ந்த
சரி தான்
, "இரவும் கருப்பு தானே "!

சிறு வயதில் பேய்களால் ஓடிப்போன தூக்கம்,

இப்பருவத்தில்
  பெண்களால் ஓடிப்போனது.
சுமாராக இருக்கும் நம்மை
(என்னை)
சூப்பர்-
ஆக இருக்கும் ஒரு பெண்
தன் கண்ணைச் சிமிட்டிப் பார்த்தாள் -
போனது அன்றைய தூக்கம்
இமைதாள் - போனது அடுத்த இரவின் தூக்கம்
சிரித்தாள் - போனது  அந்த வாரத்தின் தூக்கம்
பேசினா
ள் - போனது அந்த மாதத்தின் தூக்கம்
பழகினாள் -
போனது அந்த வருடத்தின் தூக்கம்
விலகினாள் -
போனது வாழ்க்கையின் தூக்கம்
"மனம் வலித்தது , கண்கள் விழித்தது"

பின் ஒருவாறு , காலப்போக்கில் தேறியது மனம், போனது தூக்க சுகம்.
வீட்டின் பொறுப்புகள் தோளில் விழ, மறுபடியும் போனது தூக்கம்.
வீட்டின் சுமையால், விரும்பிய வேலை செய்ய முடியாமல்,
வந்தது மன இறுக்கம்,போனது சுக தூக்கம்.

இப்பொழுது இதையெல்லாம் வெற்றியுடன் கடந்தாயிற்று.
வெற்றிக்கென்று ஒரு விலை கொடுக்க வேண்டுமல்லவா.
விலை . . . . . . . . . ஹ்ம்ம், வேறென்ன  "தூக்கம் தான்"!

இப்பொழுது எனக்கு பெண் பார்கிறார்கள்.
இப்பொழுதும் எனக்கு தூக்கமில்லை.
காரணம்  முன்னாள் காதலியை பிரிந்த சோகம்,
வரப்போகும் பெண், 
அவளை மாதிரி(அவளாகவே) இருக்க மாட்டாளா என்ற ஏக்கம்.

ஒருவழியாக கல்யாணம் முடிந்தாயிற்று  !
எல்லோர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதில்  ரொம்பவே சோர்வு !
இன்றிரவாவது தூங்க விடுவார்கள் என நினைத்தேன், அனால் அதுவும் நடக்கவில்லை.
ஆனால் கவலைப்பட வேண்டாம், நல்ல சேதி தான்.
இன்று எனக்கு முதலிரவு !
புது மனைவி, புது சொந்தங்கள் என,
என்னை விட்டு பிரிந்தன பல இரவுகள்.
மோகத்திற்கு விலையாய் கொடுத்த இரவுகள் பல
அந்த மோகம் பரிசாய் கொடுத்த குழந்தையை வளர்க்க
தியாகமாய் விட்டெறிந்தேன் பல இரவுகளின் தூக்கத்தை.

பின் குழந்தையின்..... "என் குழந்தையின்" (அதில் தான் எத்தனை பெருமை)
வளர்ப்பிலும்,படிப்பிலும் விரயம் போனது என் இரவுகள்.
பெண் குழந்தை ஆயிற்றே என்ற கவலையும்,
இரவில் அலாரம்(alarm) வைக்காமல் எழுப்பிவிட்டு
என்னை வேடிக்கை பார்க்கும்.
எப்படியோ அவளும் வளந்தாயிற்று !
அவளுக்கு சீரும் சிறப்புமாய் கல்யாணம் செய்தாயிற்று !
அதற்காக விட்டுகொடுத்த தூக்கமில்லா இரவுகளைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
கல்யாணத்திற்கு பின் மகள் பிரிந்து சென்றதால்,
தூக்கம் வரா இரவுகள் சில.
புகுந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வாள் என்ற கவலையில்
தூக்கம் போன இரவுகள் சில.

இப்பொழுது அவளுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது.
பேரன் பிறந்திருக்கிறான் ! மட்டற்ற மகிழ்ச்சி !
இன்று தூங்கலாம் என் நினைத்திருந்தேன்.
சற்று முன் தான் மகள் அழைத்தாள்
பேரனை வளர்க்க எங்கள் உதவி கேட்டு.
இரண்டு வருட உறக்கம் பேரனுக்காக விட்டெறிந்தேன் !

இப்பொழுது பேரனும் வளர்ந்து விட்டான்.
எங்கள் உதவி தேவையில்லை.
நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாயிற்று.
"இரவு மணி  7 :30 "
இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டேன்,
மொட்டை மாடியில் காலாற நடந்தேன்,
காது மடல்கள் குளிர்கிற வரையில், காற்றில் மிதந்தேன்.
சிறு வயதில்,
நான் எண்ணிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையை சரி பார்த்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
காரணம் - இன்றிரவு நான் தூங்க போகிறேன்.

கருப் பொழுதில், என் தாயின் கருவறையில்,
காற்றே இல்லாத கும்மிருட்டில், எந்தக் கவலையும் இன்றி,
சந்தோசமாக சுருண்டு படுத்திருந்த இரவுகள்,
நான் வெளிவந்த பின், எந்த  a /c காற்றும்  
எனக்கு கொடுக்க வில்லை.

இன்றிரவு நான் அப்படி ஒரு தூக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் .
ஆம்! நான் தூங்கப் போகிறேன்!!
இனி நான் விழிப்பது நாளை அல்ல.
அடுத்த ஜென்மத்தில் தான்.
அதுவரை மற்றொரு தாயின் கருவறையில்,
அடுத்த ஜென்மத்தின் அத்துனை இரவுகளின்
"நிம்மதியான தூக்கத்தையும்"
ஒரே பொழுதாக, பத்து மாத தூக்கத்தில் ஆளப்போகிறேன் !!
  

 good night ! sweet dreamz !!

                                       ~ shavin earthy

Monday, 28 May 2012

"நிழல் இந்தியா"

கடை வீதியில் ஒரு பிச்சைக்காரி குழந்தைகளைக் கூட்டி வந்தாள்.
ஒன்று வயிற்றில் , மற்றொன்று இடுப்பில் , மற்றும் ஒன்று கைப்பிடியில்.
அவர்கள் அவள் குழந்தைகள் தானா என்பது சந்தேகமே
அவள் வயிற்றில் இருப்பது குழந்தை தானா என்பதும் சந்தேகமே !

அவள், கைபிடியில் இருந்த குழந்தையின் கையில் ஒரு தட்டை கொடுத்தாள்.
அது சாப்பிடும் தட்டு அல்ல . பிச்சை எடுக்கும் தட்டு !
( "தட்டில் தான் எத்தனை பிரிவு, எத்தனை பயன்")
அவள் , குழந்தையை பிச்சையெடுக்க சொன்னாள்
அதுவும் (குழந்தை) ஏன் எடுக்க வேண்டும் , எப்படி எடுக்க வேண்டும் , எதற்கு எடுக்க வேண்டும், யாரிடம் எடுக்க வேண்டும்
என்பதறியாமல் திரு திருவென அகல விழித்தபடி ,
கையில் தட்டை ஏந்தியபடி மூத்த பிச்சைக்காரியை விட்டு விலகி வந்தது
அந்த பிச்சைக்காரியும் தன் பங்குக்கு பிச்சை எடுக்கும் "வேலையை" ஆரம்பித்தாள்.

தெருவின் இடது புறம் அது (குழந்தை) எடுக்க , வலது புறம் அவள் எடுத்தாள்.
பின் இருவரும் புறம் மாறி பணி தொடர்ந்தனர் .
வேலை நேரம் முடிந்ததும்  குழந்தை அந்த பிச்சைக்காரியின் பக்கம் சென்றது .
தனக்கு கிடைத்த பிச்சைக்காசின் மதிப்பு கூட தெரியாமல் ,
அந்தத்  தட்டை அவளிடம் நீட்டியது .

பிச்சைக்காரியின் முகம் முன்பை விட மூர்க்கமானது .
"இவ்வளவு தான் உன்னால் முடியுமா ,
 இந்த "பிச்ச காச " வச்சு ரொட்டி கூட வாங்கி திண்ண முடியாது " எனக் கூவினாள்.
பின் தணிக்கைச் சொற்களால் வசை பாடினாள்.
குழந்தைக்கு பல வார்த்தைகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை .
அதனால் அது ஒன்றும் செய்யாமல் நிற்கவே
பிச்சைக்காரியின் பித்த குணம் தலைக்கேறியது .
தன் இடுப்பில் இருந்த மற்றொரு குழந்தையை கையில் எடுத்தாள்
தன் ஒரு கையினால் அந்த குழந்தையின் கைகளையும் உடலையும் இறுகப் பிடித்து ,
மற்றொரு கையால் அதன் கால்களை ஒன்று சேர்த்து , அந்த பச்சிளத்தை கம்பாக்கினாள்.
பின் அதைக்கொண்டு, பிச்சை எடுத்த குழந்தையை அடித்தாள்.

கையில் இருந்த குழந்தையும் , பிச்சை எடுத்த குழந்தையும் ,
இரண்டும் அழுதன !
பிச்சைக்காரி ,
தன் ஆத்திரம் தீர அடித்தாள் ,
தன் ஆத்திரம் தீர்ந்த பின்னும் அடித்தாள் .
அழுகைச் சத்தம் கூடுவதற்கு பதில் குறைந்தது .
ஆம் ! ஒரு குரல் அடங்கி இருந்தது .

பச்சிளம் குழந்தை அல்லவா!
அதை வைத்து அடிக்கும் போது
பிச்சைக்காரி , அதன் தலை அடியில் கை வைக்க மறந்திருந்தாள்.
பாவம் அவள் என்ன செய்வாள் , அவளுக்கும் இரண்டு கைகள் தானே .
குழந்தையை அடிக்க உதறும் போது , இரண்டு உதரலிலேயே,
பச்சிளத்தின் கழுத்து எலும்பு  உடைந்திருக்கும் போலும் .
ஆனால் , அதன் பின்னும் அதை வைத்து அடித்தாள் .
கழுத்து உடைந்ததால் , குழந்தையின் தலை ,
அங்கும் இங்கும் தொங்கிய படியே , பட படவென ஆடியது .

சிறிது நேரத்தில் அடிப்பதை நிறுத்தினாள் பிச்சைக்காரி .
"கை வலித்திருக்கும் போல ?!"
தன் கையில் இருந்த , தலை தொங்கிய குழந்தையின் முகம் பார்த்தாள்,
பின் மருங்க விழித்தபடி , தன்னையும் தலை தொங்கிய குழந்தையையும்
யாரேனும் கண்டு கொண்டார்களோ என சற்றே சுற்றிப் பார்த்தாள் .
நல்ல வேளை! யாரும் கண்டிருக்கவில்லை என்பதறிந்தவுடன்
ஒரு கையில் இறந்த குழந்தையை தூக்கி கொண்டு ,
மற்றொரு கையால் பிச்சை எடுத்தக் குழந்தையை தர தரவென இழுத்துக்கொண்டு ,
அங்கிருந்து விரைந்தாள் .

சில தெருக்கள் தாண்டிச் சென்று
ஒரு தெரு முனையில் இருந்த குப்பைத் தொட்டியில்
யாரும் பாரா சமயம் , இறந்த குழந்தையைப் போடப் போனாள்.
போடும் முன் குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறைப் பார்த்தாள் !
( ஆஹா , இது தான் தாய் பாசமோ !!!? )

இவள் நல்ல பிச்சைக்காரி தான் .
ஏன் என்றால் , இறந்த குழந்தையை வைத்து
புதைக்க பணம் புரட்டுவதாகச் சொல்லி
இவள் பிச்சை எடுக்க வில்லை .

"ஒரு வேளை அந்த அளவிற்கு அறிவில்லையோ ?"
"ஓஹோ ! இதன் பெயர் தான் அறியாமையோ ?!"

பகட்டுக்காக , பகலாய் வேஷம் போடும் ,
இருள் கவிந்த , நிழல் இந்தியாவின் நகலே இது  !





[பின் குறிப்பு  : இதை மாற்றிட காமராஜர்கள் மட்டும் போதாது , காமராஜினிகளும் தேவை ]

ஜெய் ஹிந்த் !

Friday, 18 May 2012

May be I'm wrong ?!

God, whats going On...!

 

I couldn't do anything !
I'm out of mind.
My mind swirls like a whirl in a pool 
It goes there, it goes here
It goes out of control.
Many and many things just pass through my mind
But i couldn't figure it out as WHAT THEY ARE !
Something striking like a flash
Just like a lightning
But what is that ???

Man , I ....
    got bored up with all !!!

Daily the same time table follows
   "The same Sun rise and the same Sun set"
     But atleast they are good to see
     and gives a pleasant Orangy feel !

Other than that, 

     Why am i waking up ?!
     Why am i eating ?!
     Why am i going college ?!
     Why am i coming home back ?!
     Why am i sleeping ?!
     Why am i continuing all these for all these yeears ?!
   
More naturally , everyone does so !!

But... I have a question now ...
   "is that only i'm thinking such or everyone thinks the same?
Well , i know only about me and so, now i continue.

     What am i made for ?!
     Why am i made for  ?!
     Where am i made for?!
                             -----No, i don't need the answer as Earth ! DAMN it !

Really i got bored up , hooked up, freaked up and fooled up.
I guess , the next thing i must do myself is ,
just hang up to the ceiling ! 
                            ------Not a crazy thing !

     Why can't i be a normal person ?!
     Why can't i be like everyone in my family ?!

"They all grew up, studied something, got a job, got married,
 blessed with little ones, continues their family,
 later they'll die one day !!!"

Now see that, their circle is so small ! Just their family.
Nowadays , they are hardly seen and hardly in touch.
They may come for a family function once an year,
And by that time, they are good !

"They talk good, They smile good,
And finally , they bid good byes !"

Now they can be seen only by the next year or so...
And sure , we'll be awaiting their arrival
Atleast, they come once an year ! uuuff!!

So thus,
            "they are produced"
And then,
            "they produce"
Later,
            "they perish"

And who knows !, if  there is a re-birth
They may come again . . . .  ho ho ho !!

So, is this life ?!
    I couldn't understand how they are enjoying ?!!
    Hmmm ,  actually , are they enjoying...??

Now , what is enjoying or enjoyment ?
How does it feel ?!

Now, i believe, if one gets satisfied with a thing, he'll never go for it again.
b'coz, satisfaction comes only when a thing is completely full filled.

And now, i have read in many novels and also heard it many times that,
"Acouple having sex is always quoted as ""couple enjoys"" "
But now , note this , if they really get enjoyed, they"ll never go for it again.
But every night they do the same
Untill they coudn't do it anymore or if they get bored up!

Now note this,
    "they haven't stopped 'cos they got satisfied , but they got bored.
So, when can one get fullfillment ? And in what way ?

Coming to me, whoa ! whoa ! wait, wait,wait !
Now i got something struck in my mind.
There are 2 possible ways to leave a thing,
    1.Once you get satisfied
    2.Once you get bored up

Okay lets continue,
        How can i become a state of enjoyable...?
        I mean , how to figure out what'll make me enjoyable ?!
Naturally , i'm a kind of person, who gets bored easily !
I can't hang up with a single thing always! My mind changes always!
Of coure, everyone's mind changes with their age and experience !
But upto me, i always get my mind changed up, when i get bored up .
Now, is there any moment of getting full satisfied....nope, not at all !!

"i don't know why am i having a bike ?
 i don't know why am i having a mobile?
 i don't know why am i having lot many things?
 and why and what am i doing?!"

Of course,
"bike is to ride, mobile to speak,message, chat..."
But Why........?
Can't i live without them ?!
Of course I can ! But i couldn't leave that also.
So its evident that, i'm neither in that extreme nor in this extreme.
And jus hanging in the middle.

"Does anyone and everyone think like this, or is it so that i'm going mad or psychic?!"

Now, see i've written five-six pages.
But what for?!
Why should i write ?
Is it that i'm going to publish?
Is it that i wish you to read and give ur comments?!
Is it that i wish to show that "i can write for pages"
Am i going to be a writer?!
Come on, i only have questions and no answers!
Now Shavin becomes a question mark!

Now , after writing these six pages,
My mind says to me, "man its enough ! , the one who reads this will get bored if u continue anymore " .
And now it adds that already they got bored and vex".
Oh now , come on, is that the voice of my mind or its of Yours ?!

Again the Question arises...?...!
'Cos the title itself is a Question !

                                                                         ~ shavin earthy

Thursday, 5 April 2012

நீயே கடவுள்



நித்தமும் தொழுதோம் 
நிதர்சனமும் கண்டோம் 
கனியமுதும் படைத்தோம் 
தமிழ்ச்சுவையும் சேர்த்தே !


பற்றுதனை கொண்டோம் 
முற்றிலுமாய் உன் மீதே 
கற்று உனை அறியவே 
கடுந்தொலைவு கடந்தோம் !

கச்சிதமாய் உனைக் கண்டு 
காவியம் தனை படைத்திடவே
பார் முழுதும் பறந்தோம் 
பரிதவித்தே நின்றோம் !

காண்கர்கரிய சிற்பமாய் 
கற்பனையிலே சிறப்பாய் 
கண்மூடி உனைக் கண்டோம் 
கண் திறந்தால் - வெற்றிடம் வெறும்பியதே !

முக்குலத்தோர் முதல் இக்குலத்தோர் வரை 
கடுந்தவம் இருந்தும்-உனைக் 
கண்டொளிக்கவும் இல்லை-தனை 
விட்டொழிக்கவும் இல்லை !

இதிகாசத்திலும், கவிச்சோலைகளிலும்
பரந்தாமனாய், பார் போற்றும் வள்ளலாய் 
புரட்சித்தலைவனாய் , புஜ பல பராக்கிரமனாய்த் தோன்றியவனே
உனைப்  புரியாமலேயே  கடந்தோம் !

எங்கெல்லாம் அதர்மம் தழைக்கின்றதோ-அங்கெல்லாம்
தனை  அழிக்க தோன்றவுமில்லை , மனைக் காத்தருளவுமில்லை
 பார் போற்றும் பாரதியே 
நிற்பதும் , நடப்பதும் , பறப்பதும் மட்டுமே மாயையோ!

என் இன மக்கள் பிளவுண்டு வாழவும் , பிறர்தனை  வதைக்கவும் 
முழுமுதற் பொருளாகவும் கர்த்தாவாகவும் இருக்கும் உனை 
வீணாய் தினம் தொழுகின்றனர் 
நீயே கதி என்று இருகின்றனர் !

எல்லாமாய் இருப்பவனே 
 யாவரும் தொழுபவனே 
பண்டைய போரில் , வில் அம்புகளும் வாள்களும் 
உனைப் பதம் பார்க்காமல் நீ பிழைத்திருக்கலாம் 

ஆனால் இக்கணமோ ,
ஐயாயிரம் கல் தொலைவில் இருந்தாலும் 
துல்லியமாய் உனைத்தாக்கிடவே பார்த்திபன் பலர் இருக்கின்றனர்  !
அதனாலேயோ நீ வர மறுக்கின்றாய் !

 அட ! 
புரியாத புதிராய் இருப்பவனே 
உனைப் புரிந்தே விட்டேன் நானே !

மட மாந்தர்களே  !

அவன் இருக்கின்றான் 
ஆனால் அவனோ இல்லை 
புத்தியும் இருந்தும் புரியாமல் இருக்கின்றீரே 

இத்தனைக் கற்றும் , இத்தனைப் பெற்றும் 
முற்றும் உனை அறியாமல் 
கல்லைக் கடவுள் என்கிறீரே !

கடவுள் என்று எவரும் இல்லை
ஆனால் அதன் தன்மை மட்டும் 
தரணி எங்கும் அமுதாய் தழுவுகின்றது 

அது உன்னிடமும் இருக்கின்றது 
அது உன்னிடமே இருக்கின்றது 
அதை அள்ளித் தெளித்தால் 

            "" நீயே கடவுள் "" 


                                                                 ~shavin earthy 
    

Saturday, 31 March 2012

சோம்பல்

டிஜிட்டல் கிளாக்கில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது  நொடிகள் கடந்து போவது.


இருந்தும் என்ன பயன் ?!!


அதைப் பார்க்க கூட சோம்பலாய் இருக்கிறது !!

Thursday, 22 March 2012

என் உயிர் மழை

நனைந்து கொண்டிருந்த நவம்பர் மாதத்தில்
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .

குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது 
உன் பார்வைத் தீயினிலே 
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.

உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை 
பாராமல் சென்றது பெண்மை 
என்னிடம் ஏன் இந்த வன்மை 
உன்னில் பிடித்தது-மென்மை.

அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே 
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும் 
தொல்காப்பியனையும் மறந்தேனடி !

சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால் 
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான் 
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !

பம்பாய்

என் நாட்டின் வலது கையோ பம்பாய்

அதில் குண்டு வெடித்தது வம்பாய்

மதப்போராட்டம் வீறிட்டது அம்பாய்

போராளிகள் கையில் ஏந்தினர் லத்திக் கம்பாய்

நல்லுணர்வுடன் உதவினர் சிலர் அன்பாய்

அதில் குற்றம் கண்டனர் சிலர் வீம்பாய்

அதைப் புரியவைத்தனர் பலர் பண்பாய்

புத்துணர்வுடன் புதுத்தெம்பாய்

வெகுண்டெழுந்தது எமது பம்பாய்

                                                       ~shavin earthy

"எங்கேயும் காதல் - எனக்குள்ளும் காதல் "

உலகம் உறங்கும் நேரம்
தனியே நான் இங்கிருக்கும் சோகம்
அடி பெண்ணே  உன் நிழலை எங்கே காணோம்
என் மனதில் காதலின் காயம்
அன்பே இது உன் மாயம் .


"யோசிக்கத் தேவையில்லை, உனை பற்றி எழுத - அனால்
யோசிக்கிறேன், உன்னை பற்றி எழுதவ வேண்டாமா என்று".

 கண்ணுக்குள் கண்ட உன்னை - இன்று
நிலத்திலும், நீரிலும், காற்றிலும், ஆகாயத்திலும் மட்டுமே காண முடிகிறது.
நெருப்பில் உனைக் காணமுடிவதில்லை!
அதனால் இறப்பில் நெருப்பில் போக விருப்பமில்லை எனக்கு.

"சிதறிய கண்ணடித் துண்டுகளில் தெரியும் பிம்பங்கள் போன்று
இரவில் பல நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நீ  தெரிகிறாய்".


இதுவரை நான் மட்டுமே ஒருதலையாக காதலிக்கிறேன் என நினைத்தேன்,
ஆனால் கல்லூரி கடைசி நாட்களில், பிரிவு நெருங்கையில்,
பிரிவைத் தடுக்க வழியில்லாமல், உன் இயலாமையால்,
நீ  என் மீது கோபப் படுகையிலும்,
வார்த்தைகளால் உரிமையாக சுட்ட போதிலும் தான் தெரிந்தது-நீயும்
என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என!
ஆனால் அதை உன் மனதிற்கு வெளிப்படையாக சொல்லத் துணிவில்லை.

ஒரு வருடத்திற்கு முன் நீ என் வாழ்வில் வந்திருந்தால்,
உன் வாழ்வும் என் வாழ்வும் வேறு திசையில் மாறி, ஒன்றாய்  இணைத்திருக்கும்.
ஆனால் இன்று இருவரும் வெவ்வேறு திசையில் பயணிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம்.
அட!  வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இது தானோ.

"எங்கு பிரிந்து சென்றாலும், நீயும் நானும் இப்பூஉலகில் தான்!
மறைவதும் - கலப்பதும் இவ்வுலக மண்ணில் தான்!

நீ சுவாசித்த காற்று என்றாவது ஒரு நாள்
இவ்வுலகைச் சுற்றியாவது எனை வந்து சேரும், வருடும் !

நீ கால் நனைத்த கடல் அலை என்றாவது ஒரு நாள்
என் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் என் மீது மழையாக விழவே செய்யும்".
"என்றாவது ஒரு நாள் பூமித்தாயின் மடியில் ஒன்றாக கலப்போம் ,
அது வரையில் நினைவுகளைச் சுமப்போம்!"

        
---இப்படி எல்லாம் சொல்லியே மனதைத் தேற்றிகொள்ளும் காதலர்களில் ஒருவன்
                                                                                        
                                                                                ~Shavin Earthy